வங்கதேசத்தில் உள்ள அகதிகள் நாடு திரும்ப வாய்ப்பில்லை – ஐ நா அறிக்கை

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர் மீது மிகக்கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அவர்கள் நாடு திரும்ப வாய்ப்பில்லை என ஐ நா தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ஐந்து லட்சம் ரோஹிங்யா அகதிகளில் தேர்ந்தெடுத்த சிலரிடம் ஐநா மனித உரிமை அலுவலகக் குழுவினர் நடத்திய நேர்காணல் மற்றும் ஆய்வின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மனதிலும் உடலிலும் அனுபவித்த வலியிலும் அச்சத்திலும் இருந்து ரோஹிங்யா அகதிகள் இன்னும் மீளவில்லை என்றும், மியான்மர் ராணுவத்தினர் மனித உரிமைகளை மீறி தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்யா இஸ்லாமியர் நாட்டை விட்டு தப்பி ஓடும் வகையிலும் அவர்கள் திரும்பி வர நினைக்காத வகையிலும் நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட மிகக் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஐநாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

One Response to வங்கதேசத்தில் உள்ள அகதிகள் நாடு திரும்ப வாய்ப்பில்லை – ஐ நா அறிக்கை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன