லிபியாவில் அடுத்த ஆண்டு மார்ச்சில் தேர்தல்களை நடத்த திட்டம்

லிபியாவில் அடுத்த ஆண்டில் பொதுத்தேர்தல் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தலை நடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கடாபியின் ஆட்சிக்குப் பின்னர் அந்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை குலைந்தது. இதையடுத்து, வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் 2015ஆம் ஆண்டில் புதிய அரசு அமைந்தது. ஃபயேஸ் செராஜ் ((fayez seraj)) என்பவர் லிபியாவின் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த ஆண்டு மார்ச்சில் தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

ஐ.நா. முயற்சியால் அமைந்த அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அரசு என திரிபோலி மற்றும் கிழக்கு லிபியாவில் பிரிந்து செயல்படும் நாடாளுமன்ற அமைப்புகளை ஒருங்கிணைக்க தேர்தல் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன