லாலுவுடனான பிரச்சனை குறித்து மனம் திறந்த நிதிஷ் குமார்

பொறுமையை இழந்ததால் தான், லாலு பிரசாத் உடனான கூட்டணியில் இருந்து விலகியதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சியமைத்த நிதிஷ் குமார், லாலு பிரசாத் கூட்டணியில் இருந்து பிரிந்தபின் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய நிதிஷ் குமார், லாலு தனது மகன் தேஜஸ்வியை தொடர்ந்து பாதுகாத்து வந்ததாகவும், ஊழல் புகார்கள் குறித்து தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்ட போதிலும், அதை கேட்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

கூட்டணியில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம் தான் என்ற அடிப்படையில் அவர்களுடன் பொறுமையைக் கடைபிடித்ததாகவும், ஆனால் ஒரு கட்டத்தில் தாம் பொறுமை இழந்து விட்டதாகவும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன