லாரியில் இருந்த தண்ணீரை சாலையில் திறந்துவிட்டு போராட்டம்

தூத்துக்குடியில் 50க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளை நடுவழியில் சிறைபிடித்த இளைஞர்கள், லாரியில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீரை சாலையில் திறந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி புதுக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே தூத்துக்குடி – பாளையங்கோட்டை நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரிகளை நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிலர், திடீரென வழிமறித்தனர். பின்னர் லாரிகளின் டேங்குகளில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீரை சாலையில் திறந்து விட்டனர்.

விளைநிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து சிலர் சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீரை விற்பனை செய்வதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து 50க்கும் அதிகமான லாரிகளை வழிமறித்து தண்ணீரை திறந்துவிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதததையடுத்து போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். குடிநீர் நிறுவனங்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கைது செய்யப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!