லண்டன் மெட்ரோ தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பு

லண்டன் சுரங்க மெட்ரோ ரயில் குண்டுவெடிப்புக்கு, ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. லண்டனின் பார்சன்ஸ் கிரீன் டியூப் சுரங்க ரயில் நிலையத்தில் ஒரு ரயிலில் அந்நாட்டு நேரப்படி நேற்று காலை குண்டு வெடித்தது.

இந்த தாக்குதலில் பயணிகள் 29 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்காக ஐ.இ.டி. ரக வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் பயன்படுத்தி இருப்பதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

அந்த இயக்கத்தின் அமக் ((amaq)) செய்தி இணையதளத்தில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் லண்டனில் ஐந்தாவது முறையாக தாக்குதல் நிகழ்ந்துள்ளதால், பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் அபாய கட்டத்தை எட்டி இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரெசா மே தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன