லண்டனில் மெட்ரோ ரயிலில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக 18 வயது சிறுவன் கைது

லண்டனில் மெட்ரோ ரயிலில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக 18 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு லண்டனில் உள்ள பார்சன்ஸ் கிரீன் (parsons Green) பகுதியில், சுரங்கத்தில் சென்ற ரயிலில் நேற்று வெடிகுண்டு வெடித்தது. இதில் பொதுமக்கள் 29 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். திவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பாக 18 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். டோவர் (dover) என்ற இடத்தில் வைத்து அவரைக் கைது செய்த கெண்ட் போலீசார், காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன