Advertisement

யோகி ஆதித்யநாத்திற்க்கு கறுப்புக் கொடி காட்ட முயற்சித்தவர்கள் மீது பாஜகவினர் தாக்குதல்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் முதலமைச்சருக்குக் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்த இளைஞர்களுடன், பாஜகவினர் மோதலில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. லக்னோவில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதிக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பாஜக ஆதரவாளர்களுடன் மோதல் ஏற்பட்டது. கறுப்புக் கொடியுடன் வந்த இளைஞர்கள் சரமாரியாகத் தாக்கப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன