ரோஹிங்யாஸ் இஸ்லாமியருக்கு உதவத் தொடங்கியுள்ளது வங்கதேச தனியார் அமைப்புகள்

வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யாஸ் இஸ்லாமியருக்கு சில தனியார் அமைப்புகள் உதவத் தொடங்கியுள்ளன. மியான்மர் நாட்டில் உள்ள ((Rakhine)) ரக்கைன் மாநிலத்தில் வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கிருந்த ரோஹிங்யாஸ் இஸ்லாமியர் அண்டை நாடான வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இதுவரை 3 லட்சத்து 91 ஆயிரம் பேர் வங்க தேசத்தில் முகாமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக பசியால் வாடிவரும் அவர்களுக்கு அங்குள்ள சில தனியார் அமைப்புகள் உணவுப் பொருட்களை வழங்கத்தொடங்கியுள்ளதால் அகதிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!