Advertisement
Advertisement

ரியல் எஸ்டேட் துறையை GST-யின் கீழ் கொண்டுவர திட்டம் – அருண்ஜேட்லி

ரியல் எஸ்டேட் துறையை GST-யின் கீழ் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்பட இருப்பதாக நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் பேசிய அவர், ரியல் எஸ்டேட் துறை தான், நாட்டில் வரி ஏய்ப்பு செய்வதில் முன்னணியில் இருப்பதாக தெரிவித்தார். வரி ஏய்ப்பையும், கருப்பு பணப்புழக்கத்தையும் கட்டுப்படுத்தும் வகையில், விரைவில் GST-யின் கீழ் ரியல் எஸ்டேட் துறையை கொண்டுவர ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அருண்ஜேட்லி கூறினார்.

கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொது கட்டுமானங்கள் ஆகியவை கட்டப்படும்போதோ, அல்லது அவை விற்பனைக்கு வரும்போதோ, 12 சதவிகிதம் GST விதிக்க ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும், நிலம் மற்றும் வீட்டு மனை வாங்க, விற்க வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன