Advertisement
Advertisement

ராவா நகரில் 3 ஆண்டுக்குப் பின் ஈராக் கொடி பறக்கவிடப்பட்டது

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் இருந்த கடைசி நகரான ராவாவை ராணுவம் மீட்டது.

2014ஆம் ஆண்டில் ராவா நகரைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு அரசை நிறுவி, ஜிகாதி சட்டத்தைக் கொண்டு வந்தனர். ஈராக்கில் பல்வேறு நகரங்களில் ஆட்சி புரிந்த தீவிரவாதிகள் அங்கிருந்து விரட்டப்பட்ட நிலையில், ராவா நகர் மட்டுமே அவர்கள் வசம் இருந்த கடைசி பகுதியாக திகழ்ந்தது. தற்போது ராவா நகரத்தையும் ராணுவம் மீட்டு, அங்குள்ள அலுவலகங்களில் ஈராக் நாட்டுக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் ஓடி ஒளிந்து விட்ட நிலையில், அங்கிருந்து ஒரே ஒரு பேனர் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் இஸ்லாமிக் ஸ்டேட் – யூப்ரேட்ஸ் மாகாணம் (Islamic State — Euphrates Province) என்று எழுதப்பட்டு இருக்கிறது. இந்த பேனர் மட்டுமே ஐ.எஸ். தீவிரவாதிகளின் நினைவுப் பொருளாக அங்கு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன