ராம்நாத் கோவிந்துக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு, பிரதமர் மோடி முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.பி.களின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று இருந்த இந்தக் கூட்டத்தில், பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தும் இடம்பெற்று இருந்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, ராம்நாத் கோவிந்த் அவருக்கு உதவியாளராக செயல்பட்டதாக தெரிவித்தார்.

மொரார்ஜி தேசாய்க்கு உதவிய ராம்நாத் கோவிந்துக்கு தற்போதைய மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்த பிரதமர் மோடி, வழக்கறிஞராக இருந்தபோதும், அரசியலில் ஈடுபட்டபோதும், ராம்நாத் கோவிந்த், எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!