ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் நெடுந்தீவு அருகே சிறைப்பிடிப்பு

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். தங்கச்சி மடம் விக்டோரியா நகரைச் சேர்ந்த சார்லஸ் என்பவருக்கு சொந்தமான படகில் பாண்டி, ஜார்ஜ், ரோமியோ, முருகன், தரம்ஜிஸ் ஆகிய 5 மீன்வர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி படகுடன் அவர்களை சிறைப்பிடித்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 42 பேரை தீபாவளியை முன்னிட்டு விடுதலை செய்ய அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், 5 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன