ராப் பாடகர் கொலைக்கு நீதி கேட்டு ரசிகர்கள் பிரம்மாண்ட பேரணி

கிரீஸ் நாட்டில் பிரபல பாடகர் கொலைக்கு நீதி கேட்டு நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது.

அந்நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு Pavlos Fyssas என்ற ராப் பாடகர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இதன் 4 -ம் ஆண்டு நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் திரளானோர், ஏதென்ஸ் நகரில் நீதி கேட்கும் பேரணி நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. போலீசாருக்கு பதிலடியாக, போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!