ராணுவ வீரரை நடுரோட்டில் சரமாரியாக அறைந்த பெண் கைது

டெல்லியில் ராணுவ வீரரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக அறைந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில், ராணுவ வீரர்கள் சென்ற டிரக்கை வழிமறித்து தனது காரை நிறுத்திய பெண் ஒருவர், டிரக்கை ஓட்டிவந்த ராணுவ வீரரை சரமாரியாக அறைந்தார். இது தொடர்பாக மற்ற வீரர்கள் கேட்டபோது, தனது காரை உரசுவதுபோல், டிரக்கை ஓட்டிவந்ததாக குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், ஸ்மிருதி கல்ரா என்ற அந்த பெண் ராணுவ வீரரை அடித்த காட்சி செல்போனில் படம்பிடிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, போலீசார் கைது செய்யப்பட்ட ஸ்மிருதி கல்ரா, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன