ராஜீவ் காந்தியின் 74வது பிறந்தநாள் -சத்பாவனா தினமாக கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 74வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.

டெல்லியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீரபூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் குடும்பத்துடன் வந்து மலர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் சபாநாயகர் மீராகுமார், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு வந்து ராஜீவ் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராஜீவ் பிறந்த நாளை சமய நல்லிணக்க மற்றும் தேச ஒற்றுமை நாளாக சத்பாவனா தினம் என்று காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!