ராகுல்காந்தி மீது புகார் கூறிய மகளிர் காங்கிரஸ் தலைவி நீக்கம்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய டெல்லி காங்கிரஸ் மகளிர் அணி தலைவி கட்சியில் இருந்து ஆறாண்டுகள் நீக்கப்பட்டுள்ளார்.டெல்லி பிராந்திய காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங், காங்கிரசில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தலைமைக்கு ராகுல்காந்தி உரியவர் இல்லை என்றும் புகார் கூறியிருந்தார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக பர்க்கா சுக்லா சிங்கை ஆறாண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன