ரஷ்ய கடற்படை தின விழா கொண்டாட்டம்

ரஷ்யாவில் நடைபெற்ற கடற்படை தினத்தை முன்னிட்டு பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற்றது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த இந்த விழாவில், அதிபர் புதினுக்கு கடற்படை தளபதி கோட்டை வாயிலில் வரவேற்பளித்தார்.

அங்கிருந்து படகில் புறப்பட்ட புதின், நேவா ஆற்றில் ((Neva River)) வீற்றிருந்த பிரம்மாண்ட போர்க்கப்பல்களை பார்வையிட்டு, அதிலிருந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய அவர், தீவிரவாத்துக்கு எதிராக குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றி வருவதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அதிபர் புதினுக்கு கடற்படை வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு மரியாதை அளித்தனர். மேலும், போர்க்கப்பல்கள், போர் விமானங்களின் கண்கவர் அணிவகுப்பு மற்றும் சாகசங்களும் இடம்பெற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன