Advertisement

ரஷ்ய அதிபர் புதின் பிறந்த நாளுக்காக அழகிய நாய்க்குட்டி பரிசு

ரஷ்ய அதிபர் புதின் பிறந்த நாளுக்காக அழகிய நாய்க்குட்டி ஒன்று பரிசளிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் கடந்த சனிக்கிழமை 65 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

ரஷ்யாவிலுள்ள ((Sochi)) சோச்சி நகரில் நடைபெறும் சோவியத் யூனியன் முன்னாள் உறுப்பு நாடுகளுக்கான மாநாட்டின்போது ரஷ்ய அதிபரை சந்தித்த ((Turkmenistan)) துர்க்மெனிஸ்தான் அதிபர் ((Kurbanguly)) குர்பங்குலி, புதினுக்கு ((alabai)) அலபாய் இன நாய்க்குட்டி ஒன்றை பரிசளித்தார். நாய்க்குட்டியைப் பெற்றுக்கொண்ட செல்லப் பிராணி பிரியரான புதின், அதன் தலையில் வாஞ்சையுடன் முத்தமிட்டார்.

ரஷ்யாவுடன் இழந்த நட்பைப் புதுப்பிக்கும் வகையில் நாய்க்குட்டியைப் பரிசளித்த துர்க்மெனிஸ்தான் அதிபர், விசுவாசம் எனும் பொருள் படும் வகையில் நாய்க்குட்டிக்கு ரஷ்ய மொழியில் ((Verny)) வெர்னி என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன