ரஷ்ய அதிபர் புதினுக்கு நாய்க்குட்டி பரிசளித்தார் துர்க்மெனிஸ்தான் பிரதமர்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நாய்க்குட்டி ஒன்றை துர்க்மெனிஸ்தான் பிரதமர் பரிசாக வழங்கி உள்ளார். புதினின் 65ஆவது பிறந்த தினமான கடந்த 7ஆம் தேதி அவரை துர்க்மெனிஸ்தான் பிரதமர் கர்பங்குலி பெர்டிமுகமதேவ் ((Kurbanguly Berdymukamedev)) மாஸ்கோவில் சந்தித்தார்.

பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த உயர்ஜாதி வகையைச் சேர்ந்த நாய்க்குட்டி ஒன்றை பரிசாக அளித்தார். இதனை சற்றும் எதிர்பாராத புதின் மிகுந்த மகிழ்ச்சியுடன் நாய்க்குட்டியை வாங்கி அன்புடன் அதற்கு முத்தமிட்டார்.

நாய்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்ட புதின், வெர்னி என்று பெயரிடப்பட்ட அந்த நாய்க்குட்டியை தாம் மிகவும் விரும்புவதாக புதின் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன