ரஷ்யாவில் நடைபெற்ற டாங்குகளுக்கான சர்வதேச போட்டியில் இந்தியாவின் டி-90 டாங்குகள் நடுவழியில் நின்றது

ரஷ்யாவில் நடைபெற்ற டாங்குகளுக்கான சர்வதேச போட்டியில், இந்தியாவில் இருந்து பங்கேற்ற இரண்டு டாங்குகள் நடுவழியில் நின்றதால், இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதி பெற முடியவில்லை.

டாங்குகளின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில், 19 நாடுகள் பங்கேற்ற இண்டர்நேசனல் டாங்க் பையாத்லான் ((International Tank Biathlon)) என்ற போட்டி, ரஷ்யாவின் மாஸ்கோ மண்டலத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து இரண்டு டி-90 ((T-90))டாங்குகள் ஈடுபடுத்தப்பட்டன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் டாங்குகள் போட்டியில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்ய வடிவமைப்பில் உருவான டி-90 டாங்குகள் அனுப்பப்பட்டன.

ஆனால் போட்டியில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு டி-90 டாங்குளும் அரையிறுதிப் போட்டியின்போது எந்திரக் கோளாறு ஏற்பட்டு நடுவழியிலே நின்றுவிட்டன. இதனால் இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதிபெற முடியவில்லை. ரஷ்யா, பெலாரஸ் ((Belarus)), கசகஸ்தான் ((Kazakhstan)), சீனா ஆகிய 4 நாடுகள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன