ரயில்வே பணிமனையில் திடீர் தீவிபத்து

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஏற்பட்ட தீ, 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது.பயன்படுத்தப்பட்ட என்ஜின் ஆயில்கள் சேமித்து வைக்கும் இடத்தில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து மளமளவென பரவிய தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியதால், அங்கிருந்த மரங்களும் எரிந்து நாசமானது. இதனால், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீவிபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. தீ விபத்தை அடுத்து, பணிமனை பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படையினர், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!