ரத்த சர்க்கரை அளவைக் கண்டறியும் நவீன சாதனம் அறிமுகம்

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்டறியும் நவீன சாதனம் ஒன்றை ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான ((Tim Cook)) டிம் குக், தனது மணிக்கட்டில் கட்டியிருந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சை ரத்த குளுக்கோஸ் அளவைக் கண்டறியும் சாதனத்துடன் இணைத்து, உடற்பயிற்சி செய்யும்போதும், உணவு உட்கொள்ளும் போதும் ஒருவரது சர்க்கரையின் அளவு எவ்வாறு மாறுபடுகிறது என்பதை விளக்கினார்.

ஊசியின் மூலம் ரத்தத்தை வெளியே எடுக்காமலேயே ரத்தத்தில் உள்ள சர்க்கரை, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ((Smartwatch)) ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பதே ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

120 total views, 1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன