Advertisement

ரசகுல்லா மேற்கு வங்க மாநிலத்தின் பாரம்பரிய இனிப்பு..!

மேற்குவங்க மாநிலத்துக்கு ரசகுல்லாவுக்கான புவியியல்சார் குறியீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

புவியியல் சார்ந்த குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடு என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர், ரசகுல்லாவுக்கு புவியியல்சார் குறியீடு கோரி ஒடிசா மாநில அரசு விண்ணப்பித்தது. ஆனால், ஒடிசாவின் கோரிக்கையை ஏற்க கூடாது என்றும் ரசகுல்லா தங்களுக்குதான் சொந்தம் என்றும் மேற்கு வங்க மாநிலமும் காப்புரிமை கோரியிருந்தது.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்துக்கு ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக மம்தா பானர்ஜி ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த புவியியல்சார் குறியீடுகள் பதிவு அந்தப் பொருட்களுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை வழங்குகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன