யோகாவுக்கு சவூதி அரேபிய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது

யோகாவுக்கு சவூதி அரேபிய அரசு விளையாட்டுத்துறையில் அங்கீகாரம் அளித்துள்ளது. விளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அந்நாட்டு அரசு இதனை ஒரு சிறந்த உடல்,மனப் பயிற்சி என்று ஏற்றுக் கொண்டுள்ளது.

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து சீனா, அமெரிக்கா, ஜப்பான், போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் யோகாவை பயில்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனினும் இஸ்லாமிய நாடுகள் யோகாவை விலக்கி வைத்த நிலையில், தற்போது சவூதி அரேபியாவில் சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன