மொத்த விற்பனை விலை பணவீக்கம் அக்டோபரில் உயர்வு

நாட்டின் மொத்தவிற்பனை விலை பணவீக்கம் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் வருடாந்திர மொத்தவிற்பனை விலை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை உணவுப் பொருட்கள் விலை அக்டோபரில் 3 புள்ளி 23 சதவீதம் உயர்ந்தது. இதன் எதிரொலியாக, செப்டம்பரில் 2 புள்ளி 60 சதவீதமாக இருந்த வருடாந்திர மொத்தவிற்பனை விலை பணவீக்கம் அக்டோபரில் 3 புள்ளி 59 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன