மே 5ஆம் தேதி வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கமல்ஹாசனுக்கு சம்மன்.

மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மே 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை கூறியதாகக் கூறப்படுகிறது. இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது நடிகர் கமல்ஹாசன், நீதிமன்றத்தில் ஆஜராகததால், மே மாதம் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன