மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 490 மெ.வா. மின் உற்பத்தி பாதிப்பு

நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 490 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகளிலும், 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய அலகு ஒன்றிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு நாள்தோறும் 23 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஒடிசாவில் தொடர் மழையால், அங்கிருந்து நிலக்கரி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் மற்றும் 3ஆம் அலகுகளில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், 2 மற்றும் 4ஆம் அலகுகளில் 70 மெகாவாட் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 440 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 490 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், தற்போது வெறும் 950 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன