மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 500 கனஅடியாகக் குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 150 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆனால் அணையின் நீர்மட்டம் 41 அடியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியில் இருந்து 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட 55 மெகாவாட் மின்உற்பத்தி தடைபட்டுள்ளது. நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், அணையின் நீர்மட்டம் வரும் நாட்களில் உயர வாய்ப்புள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன