மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்வு

காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர் மழைபெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் கடந்த 5 நாட்களில் 7 அடி வரை உயர்ந்துள்ளது. நேற்று காலை 33.30 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 34.60 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் நீர் இருப்பு 9.479 டி.எம்.சி-யாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன