மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆயுத தளவாடங்கள் தயாரிப்பு

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆயுத தளவாடங்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஆயுத தளவாடங்களில் 90 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையை மாற்றி மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்களை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பில்லியன்கள் டாலர் மதிப்பிலான திட்டங்களின் ஒப்பந்தத்தைப் பெற பல்வேறு நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பாக அமையும். ஜெர்மனியின் தைசென்க்ருப் ((Germany’s ThyssenKrupp Marine Systems)), யூரோப்பின் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில் தளவாடங்களை தயாரிக்கும் திட்டத்திற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!