மெல்பர்ன் திரைப்பட விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார் ஐஸ்வர்யா ராய்

மெல்பர்னில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய தேசியக் கொடியை நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்றி வைத்தார்.

இதன் மூலம் சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட முதல் நடிகை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஆஸ்திரேயியாவில் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த படங்களை தேர்வு செய்து கௌரவிக்க திரைப்பட விழா நடைபெறுகிறது.இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இந்தியா தனது 70வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் மெல்போர்ன் திரைப்பட விழாவில் தேசியக் கொடியை ஐஸ்வர்யா ராய் பறக்கவிட்டார்.

அப்போது ஐஸ்வர்யா ராயுடன் அவருடைய மகள் ஆராதயாவும் தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து வணங்கிய காட்சி காண்போரைக் கவர்ந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன