Advertisement
Advertisement

மெர்சல்’ படத் தலைப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

மெர்சல் என்ற பெயரில் விஜய் நடித்த படத்தை வெளியிடத் தடை கோரிய மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெர்சல் தலைப்புக்கு எதிராக மெர்சலாயிட்டேன் என்ற படத்தின் தயாரிப்பாளர் வழக்கு தொடந்தார்.

அப்போது மெர்சல் என்ற தலைப்பு வர்த்தகக் குறியீட்டின் படி பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதற்கு சட்ட அங்கீகாரம் உள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து திபதி உத்தரவிட்டார்.

இதற்கு எதிரான தயாரிப்பாளர் ராஜேந்திரனின் மேல் முறையீட்டு மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ராஜிவ் சக்தேர், சுரேஷ்குமார் ஆகியோர் மெர்சல் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதால் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன