மெக்சிகோவில் நிலநடுக்கம், மேக்ஸ் புயலைத் தொடர்ந்து தயார் நிலையில் நோர்மா சூறாவளி

இயற்கை பேரிடர்களால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் மெக்சிகோவை, நோர்மா சூறாவளி தாக்க உள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் புரட்டிப்போட்ட நிலையில், 2 தினங்களுக்கு முன் மெக்சிகோவை மேக்ஸ் புயல் பதம்பார்த்தது. அகாபுல்கோ, இக்தாபா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கன மழை கொட்டியது.

தாழ்வான இடங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேக்ஸ் புயலின் சுவடு மறைவதற்குள், பசிபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயல் சின்னமாக மாறி, தற்போது சூறாவளியாக உருவெடுத்துள்ளது. இது மெக்சிகோவின் பஜா கலிஃபோர்னியாவில் தற்போது மையம் கொண்டுள்ளது. இரண்டு தினங்களில் நோர்மா சூறாவளி கரையைக் கடக்கும் என்று தேசிய சூறாவளி கணிப்பு மையம் கூறியுள்ளது. இதை எதிர்கொள்ள மெக்சிகோ தயாராகிவருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன