முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என 16 மாதங்களுக்கு பின்னர் ஆய்வு செய்த மூவர் குழு தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை மராமத்து மற்றும் கண்காணிப்புக்காக உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் புதிய தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் குன்சன்ராஜ் நியமிக்கப்பட்டார். கேரள பிரதிநிதியாக அம்மாநிலத்தின் நீர்வள ஆதார அமைப்பின் செயலாளர் டிங்கு பிஜ்வாலும், தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பிரபாகரனும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்16 மாதங்களுக்குப் பின்னர், முல்லைப் பெரியாறை மூவர் குழு ஆய்வு செய்துள்ளது. பேபி அணை, ஷட்டர் பகுதி, நீர் இருப்பு, வரத்து, கசிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மூவர் குழு ஆய்வு செய்தது. வள்ளக்கடவு வழியாக பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிப்பது, பேபி அணைக்கு செல்லும் வழியைச் சீரமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேரள அரசுடன் பேசப்பட்டு வருவதாக ஆய்வுக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன