முறையான ரசீது வழங்காமல் பணம் பெறுவதாக புகார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, சுங்கச்சாவடியில் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு முறையான ரசீது வழங்காமல் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில்வர் கேஸ்கட் சுங்கச்சாவடி மையத்தில், நகராட்சி ஆணையாளரின் கையெழுத்துடன் கூடிய அசல் ரசீது வழங்காமல், போலி ரசீதுகளை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்வதாக வெளிமாநில பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், சுங்கச்சாவடி அதிகாரிகள் பெரும் லாபம் அடைவதாகவும், சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் பணமானது மாவட்ட கருவூலத்துக்கு சென்று சேராமல் உள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனால், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன