முறையற்ற உறவு காரணமாக மனைவி கொலை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முறையற்ற உறவு காரணமாக மனைவின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முருகேசனுக்கு, சக்தி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சக்திக்கு அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபருடன் முறையற்ற உறவு இருந்ததால், முருகேசன் கண்டித்துள்ளார்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சக்தி, அந்த நபருடன் திருப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் துக்க நிகழ்ச்சிக்காக சென்னப்பன்கொட்டாய் வந்த சக்தி, முருகேசனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் சக்தியை கொடூரமாகத் தாக்கியதோடு, கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் முருகேசனை கைதுசெய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன