Advertisement

முரசொலி விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்பது சந்தேகம் ?

முரசொலி பவளவிழாவில் நடிகர்கள் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில், விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் ரஜினி காந்த் கலந்து கொள்வது உறுதி செய்யப்படவில்லை.

வருகிற 10 ந்தேதி சென்னையில் நடக்க இருக்கும் முரசொலி பவளவிழாவுக்கான அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குவோர் பெயர்களில் நடிகர் கமல்ஹாசன் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பெயர் இடம் பெறாததால் அவர் பார்வையாளராக மட்டும் பங்கேற்பாரா அல்லது முரசொலி பவள விழாவில் பங்கேற்பதை தவிர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன