மும்பை பெருநகர் வெளியேற்றும் கழிவுகள் பாதி கடலில் கலப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியீடு

மும்பை பெருநகரிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் பாதி கடலில் கலப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், மும்பையில் 20 ஆயிரத்து 190 கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் ஐந்தாயிரத்து 797 கழிவறைகள் மட்டும் கட்டப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மும்பை மாநகரின் கணக்கு தணிக்கை அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. மும்பையில் ஒரு நாளில் இரண்டாயிரத்து 146 மில்லியன் லிட்டர் கழிவுகளை வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்து 98 மில்லியன் லிட்டர் கழிவுகள் மட்டுமே முறையாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.

ஆயித்து 48 மில்லியன் லிட்டர் கழிவுகள், அதாவது 49 சதவிகித கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்வகையிலும் கடலில் சேரும் வகையிலும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன