மும்பை – டெல்லிக்கு இடையே மேலும் ஒரு ராஜதானி விரைவு ரயில் சேவை

மும்பையில் இருந்து டெல்லிக்கு மேலும் ஒரு ராஜதானி விரைவு ரயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஆகஸ்ட் கிரந்தி ராஜதானி, மும்பை சென்ட்ரல் நியூ டெல்லி ராஜதானி ஆகிய இரண்டு விரைவு ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் பயண நேரம் முறையே 17 மணி நேரமாகவும்,15 மணி நேரமாகவும் உள்ளது. இந்நிலையில், மூன்றாவதாக இயக்கப்படும் புதிய ராஜதானி விரைவு ரயிலின் பயண நேரம் 13 மணி நேரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மும்பை – டெல்லிக்கு இடையேயான இந்தப் புதிய ராஜதானி விரைவு ரயில் சேவை வரும் தீபாவளிக்கு தொடங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன