மும்பையில், டிரக் மீது கார் மோதிய விபத்தில் நடிகர்கள் இருவர் பலி

மும்பையில், டிரக் மீது கார் மோதிய விபத்தில், இந்தி தொலைக்காட்சி தொடர் நடிகர்கள் இருவர் உயிரிழந்தனர்.

பிரபலமான இந்தி தொலைக்காட்சி தொடரான மஹாகாளி அந்த் ஹி ஆரம்ப் ஹை ((Mahakali – Anth Hi Aarambh Hai)) யில் நடிக்கும் ககன் காங் மற்றும் அர்ஜித் லவானியா ஆகிய இருவரும் குஜராத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு காரில் மும்பை திரும்பிக் கொண்டிருந்தனர். மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் அவர்களது கார் சென்று கொண்டிருந்த போது, டிரக் மீது மோதி பலத்த சேதம் அடைந்தது.

இதில் காரில் இருந்த நடிகர்கள் இருவரும் உயிரிழந்தனர். காருக்குள் பீர் பாட்டில்களும், திண்பண்டங்களும் இருந்ததாகக் கூறியுள்ள காவல்துறையினர், உடற்கூறாய்வுக்குப் பின்னர் விசாரணை தொடங்கும் என்று கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!