முன்ஜாமீன் கோரி நடிகை காவ்யா மாதவன் மனுத்தாக்கல்

முன்ஜாமீன் கோரி நடிகை காவ்யா மாதவன் கொச்சி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் பிரபல நடிகை கடத்திச் செல்லப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள நடிகர் திலீப்பின் மனைவியான மற்றொரு நடிகை காவ்யா மாதவனுக்கு இவ்வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.அவரும் இவ்வழக்கில் கைது செய்யப்படலாம் என்பதால் அவர் தமக்கு முன்ஜாமீன் கோரியுள்ளார். நடிகர் திலீப்புக்கு 3 முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மூன்று மனுக்களுமே நிராகரிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை திலீப் சார்பில் நான்காவது முறையாக ஜாமீன் கோரப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!