முத்தலாக் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் -நஜ்மா ஹெப்துல்லா

முத்தலாக் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மணிப்பூர் மாநில ஆளுனர் நஜ்மா ஹெப்துல்லா கருத்து தெரிவித்து உள்ளார். இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முத்தலாக் முறை பெண்கள் மீதான அடக்குமுறை என்றார்.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் காலத்தில் வாழ்ந்தாலும், 1400 ஆண்டுகளுக்கு முந்தைய வழிமுறைகளுக்கு தான் ஆதரவளிப்பதாக தெரிவித்தார். முத்தலாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியுமே தவிர தன்னார்வ நிறுவனமான அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அல்ல எனவும் நஜ்மா தெரிவித்தார்.

221 total views, 1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன