முதலைகளை கடத்தி விற்க முயன்ற இரண்டு பேர் கைது

பீகார் தலைநகர் பாட்னா அருகே நான்கு குட்டி முதலைகளை விற்க முயற்சித்த இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்து நான்கு முதலைகளையும் மீட்டனர் .முதலையை வேட்டையாடி கடத்தும் கும்பலைச் சேர்ந்த இவர்கள் ஒரு லட்சம் ரூபாய் வீதம் நான்கு முதலைகளை விற்க முயற்சித்த போது பிடிபட்டனர். முதலைகளின் தோல் அலங்காரப் பொருட்கள் செய்வதற்குப் பயன்படுவதால் இதனை கடத்தி விற்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த இரண்டு பேர் பின்னணியில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன