முதலீட்டாளர்களிடம் ரூ.2,000 கோடி மோசடி – நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்

குமரி மாவட்டம் மத்தம்பாலையில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த நிதி நிறுவனத்தை கேரளாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பேரணியாக வந்து முற்றுகையிட்டனர்.

ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் கேரள மாநிலம் காரகோணத்தில் இருந்து ஊர்வலமாக வந்து குமரி மாவட்டம் மத்தம்பாலையில் உள்ள அந்த நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது உரிமையாளர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் முன் அவரது பாஸ்போர்ட்டை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தமிழக கேரள போலீஸார் இணைந்து உடனடியாக அவரை கைது செய்யாவிட்டால் வரும் புதன்கிழமை நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பாறசாலை என்ற இடத்தில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அவர்கள் அறிவித்து உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான மத்தம்பாலை பகுதியில், நிர்மல் கிருஷ்ணா என்ற நிதிநிறுவனம் நடத்தி வந்த நிர்மலன் முதலீட்டாளர்களிடம் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பதிமூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஐம்பதாயிரம் ரூபாய் முதல் ஐந்து கோடி ரூபாய் வரை அந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *