முதலமைச்சர் உள்ளிட்ட 5 அமைச்சர்களை தகுதியிழப்பு செய்யக்கோரும் மனு

ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்டையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, முதலமைச்சர் உள்ளிட்டோரை தகுதி இழப்பு செய்யக்கோரும் மனுவை ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தாமரைக்கனியின் மகன் ஆணழகன் தாக்கல் செய்துள்ள மனுவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து, அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதித்ததாகவும், இது ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியது என்பதால் அவர்களை தகுதியிழப்பு செய்யவேண்டும் எனவும் கூறியிருந்தார். இது குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக்கூறி, மனுவை விசாரணைக்கு அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன