மீனவர் வலையில் சிக்கிய பிரம்மாண்டமான மீன்

ஆந்திராவில் மீனவர் வலையில் சிக்கிய 15 டன் எடை கொண்ட டால்பின் வகை மீன் கடற்கரையில் கிடத்தப்பட்டுள்ளது. ஆந்திராவின் மசூலிப்பட்டனம் அருகே உள்ள கிலாகலாதினி கடற்கரைப் பகுதியில் நேற்று மீனவர் ஒருவரின் வலையில் மிகப் பெரிய மீன் ஒன்று சிக்கியது. இதையடுத்து படகுகள் மூலம் கரைக்கு இழுத்து வந்த பார்த்தபோது அது இறந்து போன டால்பின் வகை மீன் என்பது தெரியவந்தது.

கிட்டத்தட்ட 15 டன் எடைகொண்ட அந்த மீன் பெரிய கப்பல் மோதியதாலோ, நோய்வாய்ப்பட்டோ இறந்திருக்கலாம் என்று மசூலிப்பட்டணம் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன