மாவட்டந்தோறும் திறந்தவெளிச் சிறைகள் – நடவடிக்கை எடுக்க உத்தரவு

தமிழகத்தில் மாவட்டந்தோறும் திறந்தவெளிச் சிறைகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் 3 திறந்தவெளிச் சிறைகள் மட்டுமே உள்ளதாகவும் அதில் 27 கைதிகள் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். திறந்தவெளிச் சிறைகள் மூலம் விவசாயம், கட்டுமானம், கைவினைத் தொழில் உள்ளிட்டவைகளில் கைதிகளை ஈடுபட வைக்கலாம் என்பதால், தமிழகத்தில் மாவட்டந்தோறும் திறந்தவெளிச் சிறைகள் அமைக்க உத்தரவிடுமாறு தனது மனுவில் கோரியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் மனுவை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!