மாயமான மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலுக்கு வடக்குப் பகுதியில் விழுந்திருக்கக் கூடும்

மாயமான மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் விழுந்திருக்கக் கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி, 239 பயணிகளுடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பிஜிங் சென்ற அந்த விமானம் மாயமானது. விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கக் கூடும் என தேடுதலில் ஈடுபட்ட மலேசியா, சீனா, ஆஸ்திரேலிய கடல் சார் தேடுதல் படை சந்தேகித்தது. இதனிடையே ரீயூனியன் தீவுக்கு அருகே கடந்த ஆண்டு விமானத்தின் இறக்கையின் பாகம் கண்டெடுக்க பட்டதாகக் கூறப்பட்டது. அந்தப் பகுதியில் தேடுதலை மீண்டும் முன்னெடுத்த நிபுணர்கள் தற்போது கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் வடக்குப் பகுதியில் விழுந்திருக்கக் கூடும் எனக் கணித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன