Advertisement

மாயமான அர்ஜெண்டினா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 7 “மிஸ்டு கால்”

மாயமான அர்ஜெண்டினா நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து 7 முறை மிஸ்டு கால் வந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.ஏ. சன் ஜுவான் என்ற நீர் மூழ்கிக் கப்பல் 44 பேருடன், தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் கடந்த 15ஆம் தேதி மாயமானது. அந்தக் கப்பல் மாயமான அன்று, காலை 10.52 இல் இருந்து மாலை 3.42 மணி வரை கப்பலில் இருந்து 7 மிஸ்டு கால்கள் வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. செயற்கைக்கோள் தொலைதொடர்பில் முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, மிஸ்டு கால்களுக்கான அலைகளை அனுப்பிய அலைக்கடத்திகளைக் கண்டறிந்து அதன் மூலம் நீர் மூழ்கிக் கப்பலின் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அர்ஜெண்டினா கூறியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன