மாநில உரிமைகளை அ.தி.மு.க. அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது – செல்லூர் ராஜு

தமிழக ஆளுநர் கோவையில் ஆய்வு செய்தது குறித்த கேள்விக்கு மாநில உரிமைகளை தி.மு.க.வை காட்டிலும் அ.தி.மு.க. அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் ஆய்வு குறித்து முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் கேட்பதை விடுத்து தன்னிடம் கேள்வி எழுப்பக்கூடாது என பதிலளித்தார்

இதனைத் தொடர்ந்து காரில் புறப்பட்ட அவரிடம் ஆளுநர் ஆய்வு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டபோது மாநில உரிமைகளை அ.தி.மு.க. அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன